[PDF] அரியநாச்சி வேல ராமமூர்த்தி புத்தகம் pdf free download

Ariyanachi by Vela Ramamoorthy (Tamil) book pdf free download

கூரிய பார்வையும், கம்பீர குரலும், உறுதியான உடற்க்கட்டும் கொண்ட நடிகரும், எழுத்தாளருமான திரு.வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துப் பயணம் பற்றி பலரும் அறிந்ததே..,

அவரின் படைப்புகளான குற்றப் பரம்பரை, பட்டத்து யானை, குருதி ஆட்டம் ஆகிய மூன்றுமே ரத்தம், கோபம், வீரம் கொண்ட ஆண் உருவத்தைக் கொண்ட அட்டைப் படங்களை கொண்டிருக்க “அரியநாச்சி” நாவல் அதே ரத்தம், கோபம், வீரம் கொண்ட பெண் உருவமே அதை தேர்ந்தெடுக்க காரணமாயிற்று..

விறுவிறுப்பான கதை அமைப்பு, குடும்ப உறவுகளுக்கு இடையில் கட்டப்பட்ட கதை, வாழ்க்கை எவ்வளவு சிறியது, கண்மூடி திறப்பதற்க்குள் தோன்றி மறையும் கோபத்தின் விளைவு, இன்றைய நாட்களிலும் சாதி பெருமை பேசிக் கொண்டு வெற்றாய் திரியும் சில மனிதர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

மொத்தமுள்ள இருபது அத்தியாயங்களும் விறுவிறுப்புக்கு கொஞ்சம்கூட பஞ்சமில்லாமல் பறக்கிறது. இறுதிப் பக்கத்தில் யாரும் எதிர்பாராத சில சம்பவங்கள் தோன்றி கதை முடிகிறது.

தமிழ்நாட்டின் கிராமத்து மண் சார்ந்த கதைகளை படிக்க விரும்புவோர் இந்த புத்தகத்தை தாராளமாகப் படிக்கலாம்.

வெட்டு, குத்து என்பது எவ்வளவு இயல்பாகக் கருதப்படுகின்றது என்பதை ஆசிரியர் வெகு தெளிவாக இக்கதையில் விவரிக்கிறார்.
சில வரிகள் திகைப்பூட்டுகின்றன: கால் பவுன் தங்கிற்காக 9 தலைகள் உருண்டது முதல் ஜெயில் நமக்காகத் தானே சர்கார் கட்டி வைத்திருக்கிறது என்கிற வழக்கம் வரை.
144 பக்கங்கள் என்ன நடக்குமோ என்கிற பதை பதைப்புடனே நகர்கின்றன. கதையின் முடிவு ஒரு நொடியில் எவ்வளவு சேதம் நடக்க முடியும் என்பதையும், கோபம் குலத்தையே அழிக்கும் என்பதையும் நம் கண் முன்னே காட்டுகிறது.
ஆசிரியரின் எழுது பேச்சு வழக்காக இருந்தாலும் வாசிக்க எளிமையாகவே இருந்தது (ஜெயமோகன் எழுத்து மட்டுமே பேச்சு வழக்கில் வெகு வித்தியாசமாகவும், வாசிக்கச் சிரமமாகவும் இருக்கிறது).

சண்ட செய்வோம் வாடா! என கோபத்தில் சிந்தனையை இழக்கும் மனிதன் சந்திக்கும் இழப்புகள் ஈடுகொடுக்க முடியாத இழப்பாக அமைந்துவிடும் என்பதற்கு சான்றாக அரியநாச்சி நாவல். தென் திசை மக்களின் வட்டார வழக்கு மொழி நாவலின் சிறப்பு.

கோபம் குலத்தை அழிக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த புதினம். தான் எனும் அகங்காரம், அது கொடுக்கும் கோபம், அதன் உந்துதலில் அழியும் குலம்… என்பதை இரத்தமும் சதையுமாக நம் எண்ணங்களை ஆட்கொள்கிறாள் அரியநாச்சி.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்