[PDF] பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் – வே ஆனைமுத்து தொகுதி 2 – பகுதி 3 புத்தகம் pdf free download

Periyar EVR Sinthanaigal- V.Aniamuthu Vol.2-Part:3 book pdf free download

திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பெரியார் நடத்திய இதழ்களிலும் அவரது சமகால இதழ்களிலும் வெளி வந்தவை. விருதுநகர் முத்துநாடார் நடத்திய நாடார் குல மித்திரன் (1922) இதழில் வெளியான பெரியார் தொடர்பான கட்டுரைகள் முதன்முதலில் இத் தொகுப்பில் சேர்ந்துள்ளன. 1925இல் தொடங்கி 1949 வரை சிறிது இடைவெளியுடன் வெளிவந்த குடிஅரசுவின் பெரும் பகுதி, விடுதலை (1935)யின் சில இதழ்கள், புரட்சி, பகுத்தறிவு இதழ்களின் குறிப்பிட்ட கட்டுரைகள், சுதேசமித்திரன் (1923), கூhந ழiனேர (1924), சுநஎடிடவ (1928), திராவிடன் (1929), உண்மை (1970) சண்டமாருதம், புதுவை முரசு, கணையாழி என்று சில குறிப்பிட்ட இதழ்களின் ஓரிரு கட்டுரைகள் ஆகியவை இத்தொகுப்பில் உள்ளன. குடிஅரசு இதழ்களே இத்தொகுப்பின் மூலபலம், குடிஅரசு வின் பங்கு 95 விழுக்காடு எனில் மற்றவை எல்லாம் சேர்ந்து 5 விழுக்காடு எனக் கொள்ளலாம். இருந்தாலும் குடிஅரசின் அனைத்துக் கட்டுரைகளும் இத்தொகுப்பிற்குள் வந்துவிட்டன எனவும் சொல்லிவிட முடியாது.

பெரியாரின் சிந்தனைகளாக இடம்பெற்றுள்ள இத் தொகுதியின் கட்டுரைகள் அனைத்தும் பெரியார் எழுதியவைதாமா என்னும் கேள்வி எழுவது பெரியாருக்கோ பதிப்பாசிரியருக்கோ எதிரானது அல்ல. கவனத்துடன் பரிசிலித்து முடிவு செய்ததாகப் பதிப்பாசிரியர் கூறுகிறார். பெரும்பாலானவற்றைப் பெரியார் எழுதியிருக்கலாம். பெரியாரின் நேரடிப் பார்வையில் அவரது ஒப்புதலுடன் உருவான பல எழுத்துகளும் இருக்கலாம். மற்றவை பெரியாரின் பார்வையுடன் துணையாசிரியர்கள் எழுதியிருக்கலாம். இது மேலும் ஆராய வேண்டிய கருத்து.

‘பெரியாரின் எழுத்துதானா? பேச்சுதானா?’ என்ற உரைகல் ஒருபுற மிருக்க, எண்ணிக்கையில் மிக்க இக்கட்டுரைகளைத் திரும்பத் திரும்பப் பேசும் தன்மை கொண்ட இக்கட்டுரைகளைப் பொருள் அடிப்படையில் வகைப்படுத்துவது எளிதான பணி அல்ல, அதைப் பதிப்பாசிரியர் முடிந்தவரை நன்றாகச் செய்திருக்கிறார்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

EVR

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்