[PDF] வாழ்ந்து படிக்கும் பாடங்கள் என்.கணேசன் book pdf free download

Vazhindhu padikkum paadangal N.Ganeshan book pdf free download (Tamil Edition)

இன்றைய மனிதன் எத்தனையோ அறிவுச் சிகரங்களை எட்டி இருக்கிறான். இரண்டு தலைமுறைக்கு முந்தைய மனிதன் கனவிலும் எண்ணியிராத சிகரங்கள் அவை. டெலிபோனையே ஒரு அற்புதமாக நினைத்துக் கொண்டு இருந்தான் முந்தைய மனிதன். செல்கின்ற இடத்தில் எல்லாம் உபயோகிக்கும்படியான செல்போனை காய்கறிக்காரி, மூட்டை தூக்குகிறவன் போன்ற அடிமட்ட மக்களும் உபயோகிப்பதை இன்றைய மனிதன் சர்வசகஜமாகக் காண்கிறான். ரேடியோவையே பிரமிப்புடன் பார்த்தான் முந்தைய மனிதன். இன்று டெலிவிஷன், நூற்றுக் கணக்கான சேனல்கள் எல்லாம் சர்வசகஜம். கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்பதெல்லாம் முந்தைய மனிதன் கற்பனையில் கூட கண்டிராத சமாச்சாரங்கள். ஆனால் இன்றைய மனிதன் அவற்றின் தொழில்நுட்பங்களின் சிகரத்தையே தொட்டு விட்டான். இன்று மனிதனின் விரல் நுனிகளில் உலகமே அசைகின்றது. இதெல்லாம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய உயரத்தில் இல்லாமல் சாதாரணர்களும், ஏழைகளும் கூட தினசரி வாழ்க்கையில் சிரமம் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் மலிவாகத் தான் இருக்கிறது.

எத்தனையோ புதுப்புது துறைகள், புதுப்புது கண்டுபிடிப்புகள், புதுப்புது சாதனைகள் என்று இன்றைய மனிதன் சாதித்துக் கொண்டிருக்கிறான். மைல் கணக்கில் நடந்து பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்க வேண்டிய நிலையில் முந்தைய மனிதன் இருந்தான். இன்றைய மனிதனுக்குக் கல்விக்கூடங்கள் மிக அருகினில் இருக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய் இன்றைய இளைஞர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கே கூட கல்வி தபால்வழியில் வந்து கொண்டிருக்கிறது. படிக்க ஏராளமான துறைகள் இருக்கின்றன, ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. படிப்பில் இன்றைய மனிதனுக்கு சலிப்பில்லை, மலைப்பில்லை, மிக வேகமாக முன்னேறுகிறான்.

ஆனால் ஒரு காலத்தில் இல்லாத சமூகச் சீர்கேடுகள் இன்றைய காலத்தில் இருக்கின்றன. தற்கொலைகள் அதிகமாக இருக்கின்றன, கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணம் எல்லா விதங்களிலும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த முந்தைய மனிதன் கண்ட நிறைவு இன்றைய மனிதனிடம் இல்லை என்பது தான். ஆயிரம் மடங்கு வசதிகள், சௌகரியங்கள் பெருகி இருந்தும், அறிவில் பல சிகரங்கள் எட்டி இருந்தும் இவன் மகிழ்ச்சியாக இல்லை. மகிழ்ச்சி தேடி இவன் பொருள்களைக் குவித்துப் பார்க்கிறான், கேளிக்கைகளை தேடி ஓடுகிறான், மது, போதை என்று எதை எதையோ முயன்று பார்க்கிறான். ஆனால் அப்போதைக்கு மகிழ்ச்சி கிடைப்பது போலத் தோன்றினாலும் நிறைவான மகிழ்ச்சி இவனுக்கு எட்டாத தூரத்தில் தான் இருக்கிறது.

வாழ்க்கை இந்த வகையில் இவனுக்கு ஒரு பாரமாகவே போய் விடுகிறது. ஒவ்வொரு நாளும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தேடி அவசரமாகவும் வேகமாகவும் இவன் ஓடிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் வெற்றியும் மகிழ்ச்சியும் இணைந்த ஒரு நிறைவான வாழ்க்கை அவனுக்குத் தொடுவானமாக தூரத்திலேயே தங்கி விடுகிறது. ஆன்மிகத்திலாவது இதைக் காண முடியுமா என்று போனால் அங்கும் போலித்தனம் அதிகம் இருப்பதால் இவனுக்கு அதிலும் சலிப்பே மிஞ்சுகிறது.

இன்றைய மனிதன் தேடும் நிறைவான வாழ்க்கைக்கு என்று சில பாடங்கள் இருக்கின்றன. அந்தப் பாடங்களைக் கற்று மனதில் பதித்துத் தேர்ச்சி பெற்றால் ஒழிய வாழ்க்கைப் பரிட்சையில் அவன் தேறி விட முடியாது. அந்தப் பாடங்கள் சொல்லித்தர இங்கு தனிப் பல்கலைக்கழகம் இல்லை. அந்தப் பாடங்களை வாழ்ந்தே படிக்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கைப் பாடங்களில் பொதுவான பரிட்சைகள் முன்பே அறிவிக்கப்படுவதில்லை. நடந்த பிறகு முடிவுகளும் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் பரிட்சைகள் வாழ்வில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. பரிட்சை முடிவுகள் மன ஆழத்தில் உணரப்படுகின்றன.

அந்த வாழ்ந்து படிக்கும் பாடங்களைத் தான் இந்த நூலில் விளக்கி இருக்கிறேன். வல்லமை மின்னிதழில் இதே தலைப்பில் நான் எழுதிய இருபத்தைந்து பாடங்கள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அந்த இருபத்தைந்து பாடங்களுடன் மேலும் முக்கியமான ஏழு பாடங்களையும் இன்னூலில் சேர்த்திருக்கிறேன்.

பல்கலைக்கழகங்களில் யாரும் சொல்லித் தராத இந்த முக்கிய வாழ்க்கைப் பாடங்களை வாசகர்கள் இந்த நூலில் படிக்கலாம்.

வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடும் அன்பர்களே, படிக்க வாருங்கள். வாழ்ந்து படிக்கும் பாடங்களை இந்த நூல் ஒரு நல்ல ஆசிரியனாக எளிமையாகவும் வலிமையாகவும் சொல்லித் தரும்!
என்.கணேசன்

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! (Tamil Edition) by [என்.கணேசன் N.Ganeshan]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்