[PDF] வானவல்லி பாகம் 2 சி. வெற்றிவேல் புத்தகம் pdf free download

Vaanavalli – Part 2 C. Vetrivel Salaiyakkurichy Book pdf free download (Tamil Edition)

சோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி. வானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன. கரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும். – சக்திஸ்ரீ

எழுத்தாளர் வானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம். முதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு. இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம். வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும். வாழ்த்துகள் பல. – சிவகுரு

வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்கி இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள். எத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும். – சுதா நரசிம்மன்

பல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி. – பவானி, தலைமை ஆசிரியை.

தமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.மொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது. – ரதிதன்

சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல். – உஷா சேஷாத்ரி

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Vaanavalli - 2 (Tamil Edition) by [C.Vetrivel Salaiyakkurichy]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்