[PDF] திராவிடத்தால் வீழ்ந்தோம் – குணா புத்தகம் pdf free download

Thiravidathal veezhnthom by Guna book pdf free download (Tamil Edition)

தமிழர்க்கெனத் தனிப் பண்பாடோ மரபோ அடையாளமோ இல்லையெனச் சொல்லித் தமிழரின் குடும்ப உறவுகளையும் பாசப்பிணைப்புகளையும் வேரறுக்க “திராவிடம்” ஓயாமல் செயற்பட்டது. அதைப் பின்பற்றித் தமிழரல்லாக் காவிகள் தமிழர் பண்பாடு இந்துப்’ பண்பாடே என்னும் பொய்யை மெய்யாக்க முயன்று வருகின்றனர். என்னதான் கேடு சூழ்ந்தாலும், தமிழும் தமிழரினமும் வாழத்தான் செய்யுமெனத் தினவெடுத்துத் தோள்தட்ட தமிழரில் இளையோர் இங்குமங்கும் தோன்றித்தான் – வருகின்றனர்; “எம் தமிழும் தமிழரினமும் இனியும் வாழும்” என்னும் நம்பிக்கை ஒளிக்கீற்று தொடுவானத்தில் தெள்ளெனத் தென்படுகிறது. தொன்மையான இனமும் மூத்தகுடியுமான எந்தமிழரினம் பகை முடித்துக் கொடியையும் கொற்றத்தையும் மண்ணையும் மரபு அறிவையும் பண்பாட்டையும் மீட்டேயாக வேண்டும். இது காலம் ஊதும் எக்காளம். நம் இனம் காக்க, அதன் மண்ணையும் காற்றையும் நீரையும் ஆற்றலையும் காக்க எழுவோம்.

இந்த நூல் பாவாணர் வழி சுட்டும் காலக்கண்ணாடி. தமிழனைத் தமிழனாக அடையாளம் காட்டும் நூல். நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் தமிழனுக்கு எத்தனையோ பகைகள் வந்தன ; வீழ்ந்தன. ‘திராவிடம்’ கேள் போல் பகை ; ஓர் ஒட்டுண்ணி ; அண்டிக்கொடுப்பது. இதைத் தமிழர்கள் உணர வேண்டும். ‘திராவிட மாயை’ யிலிருந்து விடுபட வேண்டும் . தமிழன் என்ற உணர்வு கொள்ள வேண்டும். இந்த உணர்வுகளை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.

காலம்தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம்! மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கொரு தமிழ்நாடு! ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது! தமிழகம் இன்னொரு பாசுனியவாகக்க்கூடிய கேடு நம்மைப் பேரிருளாய்ச் சூழ்ந்துவருகிறது.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

திராவிடத்தால் வீழ்ந்தோம்

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்