Thai Manne Vanakkam by K. Nammazhvar book pdf free download (Tamil Edition)
தமிழர்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்துப் பார்த்தார்கள். மலையையும் மலை சார்ந்த இடங்களையும் குறிஞ்சி என்று அழைத்தார்கள். இங்கு பூக்கும் மலர், குறிஞ்சி, முல்லை மலர் நிறைந்த காடுகளை முல்லை என்று அழைத்தார்கள். மருதமரம் நிறைந்த வயல்வெளிகளை மருதம் என்று அழைத் தார்கள். கடலோரப் பகுதிகளும், ஆறு கடலில் கலக்கும் பகுதிகளும் நெய்தல் என்று அழைக்கப்பட்டன. நீர் வளம் குறைந்த பகுதியே பாலையாகும். இப்படி நிலப்பகுதிகள் வித்தியாசமாக இருப்பதைப் போலவே மக்கள் வாழ்க்கையும் கூட வித்தியாசப்பட்டிருந்தது.
அங்கே வாழ்ந்த பறவைகளும், விலங்குகளும் வேறுவேறானவை. அங்கு வளர்ந்த செடி, கொடி, மரங்கள்கூட வேறுவேறானவை தான். மக்கள் தலைவர்களும் தெய்வங்களும் கூட வேறு வேறாகத்தான் இருந்தார்கள். உயிரினங்களின் வாழ்க்கை ஒன்றோடு ஒன்று இணைந்தும் பிணைந்தும் இருந்தது. அதை அவர்கள் எழுதியும் வைத்தார்கள். நாமும் கூடக் கொஞ்சம் குறிஞ்சி நிலத்திற்குள் நுழைவோம். அதற்காக கொஞ்சம் மலை மீது ஏறிப்பார்ப்போம். நகரத்துச் சந்தடி இப்போது இல்லை, ஏன் மனித நடமாட்டமே இல்லை. பார்வை துளைக்கமுடியாத அளவுக்கு மரம், செடி, கொடிகள். நம் மூக்கைத் துளைக்கிறதே மணம், அதற்குக் காரணமே காந்தள் மலர்தான். இரத்தச் சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாக மலர்ந்திருப்பதுதான் காந்தள் பூக்கள், நம் காதில் விழும் சக்க காந்தள் மொட்டை மலரச் செய்ய வண்டுகள் செய்யும் முயற்த எதற்கு? பூவின் உள்ளே உள்ள தேன் அதற்கு வேண்டும் மூங்கில் காடுகளுக்கு இடையில் மலைப் பாறைகள் தெரிகின் றன. என்ன ஆச்சரியம். எல்லாமே பாறைகள் அல்ல. பானை அசைவு போலத் தெரிவதெல்லாம் யானைகள். ஆணும் பெண்ணும், குட்டிகளுமாக அவை திரிவதே தனி அழகுதான். என்ன செய்ய? யானை பிளிறும் ஒலி நம்மை அச்சுறுத்தவும்
செய்கிறது.
இந்த யானைக்கூட்டம் சில சமயங்களில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதுண்டு. அப்பொழுது குறவர் இனச் சிறுவர் கள் யானைக் குட்டிகளோடு விளையாடுவார்கள். விளையாட்டு முடியும் போது யானைக்குட்டிகள் தினைப் பயிரை மேய்ந்துவிட்டு போகின்றன. யானை நடந்த தடங்களில் எல்லாம் மழை நீர் தேங்கிக்கிடக்கிறது. மலையில் காணப்படும் முக்கியமான மரங்களான மா, பலா, வேங்கை, கடம்பு, ஈட்டி ஆகியவை வளர்ந்து அடர்ந்து காணப்படுகின்றன. பலாக் கனிகள் கிளைகளில் மட்டுமல்ல, வேர் எங்கும் காய்த்துக் கிடக்கின்றன. மனிதருக்கு மட்டுமல்ல, குரங்குகளுக்கும் பலாப் பழத்தின் மேலே கொள்ளை ஆசை. கருங்குரங்கின் விரல்களில் கூரான நகம். அது பலாப்பழத்தைக் கிழிக்கப் போது மானது. ஆனாலும் என்ன? வேடனின் அம்புக்குத்தான் பயமா இருக்கு. குரங்கு வந்தால் எறிவதற்கென்றே அம்புகளைப் பாறைக்கல்லில் தீட்டி வைத்திருக்கிறான். பழுத்த மரங்களில் வலைகளை வேறு விரித்து வைத்திருக்கிறான். அதோ மரங்களுக்கிடையில் வெளிச்சமான பகுதியில் தினை பயிராகி இருக்கிறது. கரும்பு கனத்திற்கு தினைச் செடியின் தண்டு. யானைத் துதிக்கை போல திளைக்கதிர் வளைந்து தொங்குகிறது. இவைகளைக் கொத்திக் கொண்டு போக கிளி வருகுது. கடம்பை மரப்பொந்தில் கிளிக்குஞ்சுகள் உணவுக் காகக் காத்திருக்கின்றன. அதற்குத் தடையாகப் பரண் மீது நிற்கிறாள் ஒரு பெண். அவள் குரலெழுப்பிக் கிளியை ஓட்டுகிறாள். கிளி எழும்ப மறுக்கிறது. அவள் குரல் பழக்கப்பட்டுப் போய் விட்டது. அவளது குரல் கிளிக்குப் பாட்டாகக் கேட்கிறது. அசையாத கிளி கண்டு அவளது கண்களில் முத்து முத்தாகக் கண்ணீர், பூ இதழ் மீது மழைநீர் உதிர்ந்தது போல, மலைகளில் ஆங்காங்கே குரங்குக் கூட்டம். ஆண் குரங்கு மரக்கிளையில் குந்தி உலுக்குகிறது. பொலபொலவென்று பழங்கள் உதிர்கின்றன. தாயும் பிள்ளையுமாகக் குரங்குகள் அவற்றைப் பொறுக்கித் தின்கின்றன.
ஒவ்வொரு நேரம் இவைத் தெருப்பக்கமாகப் போவதும் உண்டு. அங்குதான் வீட்டுக் காரம்மா தினை தானியத்தைக் காய வைத்திருக்கிறாள். திருட்டுத்தனமாக ஓரக்கண்ணால் பார்த்திருந்து அவள் சுனையில் குளிக்கப் போகும் போது ஓடிப்போய் தினையைத் தின்பதற்கு திறமை வேண்டும். வளர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகள், காலில் மொறுமொறுக் கும் சருகுகள், இலை தழைகளைத் தின்றுவிட்டு மான் கூட்டம் படுத்துறங்குகிறது. ஒவ்வொரு நேரம் வேடர்களின் அம்புக்கு இரையாகிப் போவதுமுண்டு. யானை ஒடித்த மரக்கிளை பட்டையில் பற்றியபடி தொங்குகிறது. பசி அடங்கியப் பெண் யானைகளும் குட்டிகளும் படுத்துறங்குகின்றன. ஆண் யானை உறங்கவில்லை . காவல் பணியில் ஈடுபட்டுள்ளது. எந்த நேரத்திலும் புலிகள் வந்து தாக்கலாம். மலை போலப் பெரியது யானையின் உடல். கூரான இரண்டு தந்தங்கள். ஆனாலும் புலியின் அதிவேகத் தாக்குதலை நினைத்தாலே யானைக்கு ஒரு கலக்கம். பாறை இடுக்கில் எங்கும் மரம் செடி, கொடிகள். பாறைகளின் இடையே ஓர் இச்சி மரம்.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு மலைச் சூழல் எங்கே இருக்கிறது?
இப்படியெல்லாம் நம் மலைப்பகுதி இருந்ததை இலக்கியம் சொல்கிறது.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925