[PDF] சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் புலவர் வே பதுமனார் புத்தகம் pdf free download

Soodi Magizhvom Thooya Tamil Peyargal by Pulavar V Padhumanar book pdf free download (Tamil Edition)

ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு இனத்தின் வரலாறு, அவர்களின் பெயரிலிருந்து தொடங்குகிறது. உலகின் வேறு எந்த இனமும் தனக்கு சிறிதும் தொடர்பில்லாத, பொருள் தெரியாத ஒரு சொல்லை தன் பெயராக வைப்பதில்லை. கடந்த 15, 20 ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த அவலம், இளம் பெற்றோர்களை நாகரிகம் என்ற பெயரில் வாயில் நுழையாத, பொருளற்ற, பிறமொழிப் பெயர்களை வைக்கும் நிலை உள்ளது. சங்க இலக்கியங்களிலிருந்தும், நம் பண்பாட்டை எடுத்தியம்பும் ஒரு நல்ல தமிழ்ப் பெயரை நம் பிள்ளைகளுக்கு சூட்ட இந்த நூல் பெரிதும் பயனளிக்கும். திருக்குறள் போன்று ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் , தமிழ் நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது.

குழந்தை பிறந்ததும் வீட்டில் அடுத்தகட்ட முக்கியமான வேலை பெயர் தேடுவதே. கணவன்- மனைவி, வீட்டில் உள்ள பெரியவர்கள், உறவினர் என ஆளுக்கொரு பெயர்களை தேடிப் பிடிக்க துவங்கிவிடுவர். அந்த தேடலில் ராசி, நட்சத்திரம் என சோதிட நம்பிக்கைகளும் எண் கூட்டுத்தொகை என எண்ணியல் நம்பிக்கைகளும் ஒரு புறம் சேர்ந்துக் கொள்வது வழக்கம். இந்த நம்பிக்கைகள் மீது கவலைப்படாமல், கணவன்-மனைவி அல்லது தாத்தா-பாட்டியின் பெயர்களை சேர்த்து புதுப் பெயர்களை உருவாக்குவதும், அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டும் வழக்கமும் வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

அருந்தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும் என்று முடிவு செய்ததும் அதற்கான பெயர்களை தேட இணையத்தையே பெரும்பான்மையினர் நாடுவது வழக்கம். அப்படி இணையம் இல்லாமல் சிலபல புத்தகங்களை தேடிப்பிடிப்பதும் உண்டு. ஆனால், நமது தேடலுக்கு கிடைப்பது வெறும் 20-30 பக்கங்களே கொண்ட புத்தகங்களே. அதுவும் மிகவும் பரிச்சயமான பெயர்களும், கலப்பு பெயர்களும், ஒரே மாதிரியான பெயர்களுமே இந்தப் புத்தகங்களில் கிடைக்கின்றன. இவற்றில் தூய தமிழ்ப் பெயர்கள் அதிகம் கிடைப்பதேயில்லை.

இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் தூய தமிழ்ப் பெயர்களைப் பரவலாக்கும் நோக்கிலும் சமீபத்தில் வெளியாகியுள்ள புத்தகம் தான் “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்(பெயர் அகராதி)” புத்தகம். வாஷிங்கடனிலிருந்து வலைத்தமிழ்.காம் நடத்தி வரும் திரு.பார்த்தசாரதி அவர்களும், ஈரோட்டை சேர்ந்த பவள சங்கரி திருநாவுக்கரசு அவர்களும் பார்த்து பார்த்து தொகுத்து வைத்த 53,000 பெயர்களை வாங்கி அவற்றுள் பிழைகள், இரண்டாம் முறை திரும்ப வருதல், தமிழ்ப் பெயர்கள் போல தோன்றும் கலப்பு பெயர்கள் இவை அனைத்தையும் புலவர் பதுமனார் தலைமையிலான அறிஞர்கள் பல மாதங்களின் கடும் உழைப்பில் நீக்கி 46,000 பெயர்களை நமக்கு கொடுத்துள்ளனர். உண்மையில் இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி.

348 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் சரியாக 50 சதவீதம் ஆண் – பெண் பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ்ப் பெயர்கள் ஒற்றைப் பெயராக இருத்தல் மிகக் குறைவே. இரண்டு பெயர்களாக பண்பு,குணம்,தன்மை வெளிபப்டுத்துவதாக முதல் பெயரும், பின் பகுதி அதன் தொடர்ச்சியாக அமைவதும் வழக்கம். மற்ற புத்தகங்களில் ஒரு முதல் பகுதியை வைத்துக் கொண்டு பல பின் பெயர்களை சேர்த்துமீண்டும் மீண்டும் ஒரே பெயரையே கொடுத்திருப்பார்கள். இதுப் போன்று திரும்ப திரும்ப ஒரே பெயர்கள் வராமல் பார்த்துக்கொண்டிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

முடிந்த வரை மதம் ,சாதி அடையாளங்கள் தவரிக்கப்பட்டிருக்கிறது. அருமையான தமிழ்ப்பெயர்களின் முழுமையான முதல் தொகுப்பு என்று இந்தப் புத்தகத்தை சொல்லலாம். இந்தப் புத்தகத்திற்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நாம் அனைவரும் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கான நன்றிகளை நம் குழந்தைக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை சூட்டி தெரிவிப்போமாக.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்