[PDF] ஓர் இந்தியப் பெண் சேதன் பகத் புத்தகம் தமிழில் pdf free download

Oru inthiya pen by Chetan Bhagat book pdf free download (Tamil Edition)

One Indian girl in Tamil by Chetan Bhagat book pdf free download (Tamil Edition)

“ஒன் இன்டியன் கேர்ள்” – என்ற 2016-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம்.

ராதிகா மேத்தா. அமெரிக்காவில் ஒரு பன்னாட்டு முதலீட்டு வங்கியில் பணிபுரிபவர். கோடிகளில் சம்பளம். உலகம் முழுக்க சுற்றும் பணி. சிரமமான பணி தான் என்றாலும், அதற்காக அவர் வருந்துவதில்லை. வேலையைக் கொண்டாடுகிறார். ஆம். வாழ்க்கையின் அந்த கணத்தின் அனைத்து பரிமாணங்களிலும் வாழ விரும்பும், ஜென் ‘Z’ ரகம் அவர். அவருக்கு அனைத்து விஷயங்களிலும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொல்லும் தையரியமும் இருக்கிறது. அவருக்கு இன்னும் ஆறு நாட்களில் திருமணம்.
திருமணத்துக்காக இரண்டு வீட்டாரும் கோவாவில் கூடுகிறார்கள். பஞ்சாபி குடும்பம் என்பதால், ஆறு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி இருக்கிறது. குடும்பமே கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மது, பாடல், பஜன் என்று எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கும்போது, இரண்டாவது நாள் ராதிகாவின் முதல் காதலன் , அமெரிக்காவிலிருந்து வருகிறார். நான்காவது நாள் ராதிகாவைவிட இருபது வயது அதிகமான, ஏற்கெனவே திருமணம் ஆன, அவருடைய இன்னொரு காதலன் வருகிறார்.

இந்த ஆறு நாட்களில் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தன… ஏன் இரண்டு காதல்களும் முறிந்தது… ஏன் அவரைவிட இருபது வயது மூத்த ஒருவரை அதாவது தன் அப்பாவை விட பத்து வயதே குறைவான ஒருவரை ராதிகா காதலித்தார்… இப்போது எப்படி ஒரு திருமணத்துக்குத் தயாரானார்…? என்பன உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும், ராதிகாவின் பார்வையிலிருந்து விடை சொல்லும் நாவல்தான் சேத்தனின் ஏழாவது நாவல் ‘One Indian Girl’.

மேலோட்டமாகப் படித்தால், இது அதி அற்புத நாவல் தான். பெண்ணியம் பேசி இருக்கிறார் சேத்தன் என்று பாராட்டலாம் தான். உச்சி முகரலாம் தான். ஆனால், கூர்ந்து படித்தால் சேத்தன் நாவலில் கக்கி இருப்பது எல்லாம் வக்கிரம்… வக்கிரம்… வக்கிரம் மட்டும் தான். அவர் இந்திய பெண்களின் பிரச்னை என்று முன் வைத்திருக்கும் சிக்கல் நிஜம். ஆம், இந்த ஆண்வயப்பட்ட, ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் பெண்களுக்கென்று எந்த இடமும் இல்லை தான். இங்கு வேலை நேரம், பணிச் சூழல் என அனைத்தும் ஆண்களால், ஆண்களை மனதில் வைத்துக் கொண்டே வடிவமைக்கப்பட்டது தான். ஆனால், சேத்தன் இதை யார் மூலமாக… எவ்வாறாக சொல்கிறார்…?

இந்த நாவலையும், அது முன்வைக்கும் சிக்கலையும், தினமும் 5 மணிக்கு எழுந்து, பிள்ளைகளையும், கணவனையும் எழுப்பி, பிள்ளைகளுக்கு சமைத்து, அவர்களைத் தயார் செய்து, பள்ளிக்கு அனுப்பி, பின்னர் தான் தயாராகி, 8 மணிக்கு தாம்பரத்தில் ட்ரெயின் பிடித்து பணிக்குச் செல்லும் எங்கள் எந்த பெண்ணையும் இந்த நாவலுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியாது.

இதுவல்ல எங்கள் பெண்களின் பிரச்னை…!

இதைத்தான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று யார் மீதும் எதையும் திணிக்க முடியாது. ஒரே நாவலில் சமூகத்தின் அனைத்து தரப்பின், அனைத்து சிக்கல்களையும் சொல்லி, அதற்கு ஒரு தீர்வை முன் வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது தான். ஆனால், இந்தியாவின் முகமாக அறியப்படும் ஒரு நாவலாசிரியர், இந்தியாவின் நூறு ஆளுமைகளில் ஒருவராக கொண்டாடப்படும் ஒரு நபர், இந்தியாவின் ஆங்கில புதின இளவரசனாக கருதப்படும் ஒரு எழுத்தாளர், சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் பிரச்னைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புறக்கணித்துவிட்டு எழுதுவதில் ஒரு ஆபத்து இருக்கிறது. சேத்தனின் நாவலை ஒருவர் படித்தார் என்றால், அவர் இந்தியாவை வேறு மாதிரி தான் புரிந்து கொள்வார். யாரோ ஒருவர் எழுதினால், இதை சுலபமாக கடந்து சென்றுவிடலாம். இதற்காக அறுநூறு வார்த்தைகளில் கட்டுரை எழுதிக் கொண்டிருக்க வேண்டாம். ஆனால், சேத்தன் பத்தோடு பதினொன்று இல்லையே. அவர் இந்தியாவின் குரலாக அல்லவா அறியப்படுகிறார்.

பன்னிரெண்டு ஆண்டுகளில் 7 நாவல்கள் என்பது அசாத்தியமானதுதான். அதுவும், சேத்தன் போன்ற அதிக வாசகர்களைக் கொண்ட ஒரு எழுத்தாளரிடம் அதிக எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த அழுத்தங்களை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக எதை எதையோ கக்கலாமா…?

உண்மையாக சேத்தன் இந்திய இளைஞர்களை, இங்குள்ள சராசரி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை எழுத விரும்பினால், அவர் உடனடியாக செய்ய வேண்டியது இந்தியா முழுவதும் ஒரு பயணம். காந்தி சென்றது போல் கிராமங்களுக்கு, சிறு நகரங்களுக்கு ஒரு பயணம். அங்குள்ள எளிய மனிதர்களுடன் ஒரு உரையாடல். இதை சேத்தன் செய்யத் தவறினால், நிச்சயம் அவரால் எக்காலமும் இந்தியாவின் எளிய மனிதர்களின் முகமாக இருக்க முடியாது…!

இல்லை… எனக்கு அது தேவையில்லை. நான் இந்திய மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்துக்குக் கீழ் இருக்கும் மேட்டுக்குடி சமூகத்தின் பிரதிநிதியாக மட்டுமே அறியப்பட விரும்புகிறேன், பாலிவுட்டில் என்னுடைய நாவல்கள் சினிமாவாக எடுக்கப்படுவது மட்டுமே நோக்கம் என்றால்… சேத்தன் தாராளமாக முன்னோக்கிச் செல்லலாம்… ஆனால், அது அறமாகாது.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்