Number 40 Rettai Theru Era.Murugan book pdf free download (Tamil Edition)
வாத்தியார் சுஜாதா அமரராகவில்லை; சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தனமாகட்டும் சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும் முருகனுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை “குமுதம்” பாஷையில் ஆறு உண்டு. எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரைநடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் முற்றும் போடும் தைரியம், விஞ்ஞான பரிபாஷைகள், சாதுர்யமான சம்பாஷணைகள் இப்படி சுஜாதாபோல இந்த முருகனுக்கு ஆறு முகம் உண்டு.
அசப்புல பாத்தா, ஸ்ரீரங்கத்து தேவதையும் ரெட்டைத் தெருவும் ஜாடைல ஒண்ணுதான்; தாயைப்போல பிள்ளை. இது முருகனின் பால்ய- BIOGRAPHY… முருகன் முதிர்ச்சியோடு இளமையில் இருந்திருக்கிறார். பால்யத்தில் தான் கற்றதை, பெற்றதை, விற்றதை, அப்புறம் மற்றதையெல்லாம் ஆற அமர அசைபோட்டு ரெட்டை (தெரு) இலையில் பரிமாறியிருக்கிறார், இந்த டிஜிடெல் கேண்டீன்காரர்.
தான் OBSERVE செய்ததை அறுசுவையோடு SERVE செய்திருக்-கிறார்.
இவரது கற்பனை ஞானமும் சொற்களின் சாகித்யமும் பீடம் ஏறப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. கிரேஸிமோகன்