Nam naattu mooligaikal Part 4 by Dr. Kannappar (Author) (Tamil) book pdf free download
மூலிகைச் சக்ரவர்த்தி வேலூர் Dr.A.R. கண்ணப்பர் அவர்களின் மூலிகைமணி மாத இதழ், மூலிகைமணி மருந்து நிறுவனம், ஷாங்ரீலா மருத்துவமனை/ கிளினிக் என எல்லா வகையிலும் அவர் பணியை, மூலிகைமணி Dr. க. வேங்கடேசனின் வழியில் தொடர்வதில் இன்னும் வீரியமும், இன்னும் சிறப்புடன் செய்து, Dr. கண்ணப்பரின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகளாக தமிழகம் முழுவதும் மூலிகைமணி நல்வாழ்வு மையம், (Mooligaimani Wellness Center) மருத்துவ முகாம்கள், மருத்துவ புத்தகங்கள், நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றோம்.
“மூலிகை வளமே, நாட்டு வளம்!” என அப்போதே முழங்கிய அவரின் முழக்கம், இன்று, இப்போதைய காலகட்டத்திற்கு சரியாக உள்ளது.
– மூலிகைமணி குழுமம்
__________________________________________
கண்ணப்பரின் வாழ்க்கைக் குறிப்பு
__________________________________________
வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், முப்பதுவெட்டி எனும் கிராமத்தில் 9.7.1921ல் பிறந்தவர் மூலிகைமணி Dr.A.R. கண்ணப்பர். தன் தந்தை திரு.ராமகிருஷ்ண முதலியாரை பிறந்த பத்தாவது நாளில் இழந்தார், தாயோ அவரது மூன்றாவது வயதிலேயே காலமாகி விட்டார். வாழ்வை இழந்து பிறந்த பத்தாவது நாளில் இழந்தார். தாயோ அவரது மூன்றாவது வயதிலேயே காலமாகி விட்டார். வாழ்வை இழந்து பிறந்த வீட்டிற்கே திரும்பிய பெரியம்மா திருமதி.ஜீவரத்தினம் தனக்கு குழந்தைகள் இல்லாததால் சிறுவன் கண்ணப்பனை தன் மகனாக ஏற்று அந்த காலத்திலேயே எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.
முப்பாட்டானாரும், பாட்டனாரும், தகப்பனாரும் செய்து வந்த சித்த மருத்துவத்தையே தன் தொழிலாக கற்க கண்ணப்பனுக்கு ஆசை. ஆனால் அந்நாட்களில் சொல்லிக் கொடுப்பதற்கு யாரும் தயராக இல்லை. மூலிகைகளை பறித்து வரவும், இடித்துத் தரவும் மட்டுமே பழக்கினார்களேயன்றி, மருந்து செய்து கொடுக்கவோ, அதன் பயன்பாடுகளையோ சொல்லித் தரவில்லை.
இந்நிலையில் பலவேலைகளில் சேர்ந்து அச்சு கோர்ப்பாளர், ஹோமியோபதி டாக்டர் ஒருவரின் உதவியாளர் என்று பல வேலைகளை கற்றும் சித்த மருத்துவத்தின் மீது இருந்த ஈடுபாடும் கற்றலில் உள்ள ஆர்வமும் குறையவில்லை. 1960களின் தொடக்கத்தில் மாத ஜோதிடம் என்ற இதழிலும், 1962 இல் தினமணி எனும் நாளிதழில், நம் நாட்டு மூலிகைகள் எனும் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடர் கட்டுரைகளையும் எழுதி மூலிகைகளின் பெயர், வரைபடம், மருத்துவ குணங்கள் என்று பலவற்றையும் ஒளிவு மறைவு இன்றி மக்களிடம் மீண்டும் மூலிகை பயன்பாடு, அறிவியல் பெயர்கள், தீர்க்கும் நோய்கள் என தெளிவாக விவரித்து எழுதிவந்தார். தனக்கு மருத்துவம் சொல்லித்தராத அந்த கால வைத்தியர்களைப் போலன்றி பாமரனுக்கும், பாட்டிவைத்தியம் புரியும் படியாக தன் சிறந்த எழுத்தாற்றலால் மூலிகைகளுக்கும் சித்த மருத்துவத்திற்கும் புத்துயிர் பாய்ச்சிய முன்னோடி அவர். மூலிகைகளின் அருமை பெருமைகளை பறைசாற்றும் கருவியாகவே தன் எழுத்தாற்றலை பெருக்கிக் கொண்டார். மூலிகை என்றாலே முகம் சுளித்த காலகட்டத்திலிருந்து இன்று பலவிதமான மூலிகை அழகுசாதனங்கள், மருந்துபொருட்கள், கொரோனா தீர்வு வரை அணி வகுத்துவர அவரே முன்னோடி ஆவார். மூலிகைகளின் திறனை மட்டுமே மக்களுக்கு அறிவிக்க ‘மூலிகைமணி’ மாத இதழை 1964ல் தொடங்கி இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. பல சித்தமருத்துவ கல்லூரிகள் தோன்றவும், சித்த மருத்துவத்தின் மேம்பாட்டுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்துக் கொண்டவ இந்த மூலிகை வேந்தர் தன் அறுபதாவது வயதில் மறைந்தார்.
“ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய காரியத்தை தனி மனிதராக கண்ணப்பர் செய்து வருகிறார்”, என்றும்
“மூலிகைகளுக்குத் தலை இருந்தால், கண்ணப்பரைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடும்” என்றும் பத்திரிகை உலகம் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925