Moondru Viral (Tamil Edition)
Tamil Edition by Era.Murukan
சுதர்சன் இங்கிலாந்து தாய்லாந்து அமெரிக்கா என்று விமானத்தில் பறந்து மென்பொருள் தயாரித்துக் கொடுப்பவன் இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தின் வகைமாதிரி. வாழ்க்கையில் முன்னால் இரண்டு அடிகள் வைத்தால் பின்னால் ஒரடியாவது சறுக்குகிறது. வாழ்க்கையில் பல கணங்களிலும் எத்ரிக்கொள்ளக் கடினமான பிரச்னைகளை விட்டு விலகி,கம்ப்யூட்டரை ஒட்டுமொத்தமாக ரீபூட் செய்வது போல கன்ட்ரோல்-ஆல்ட்டர்-டெலீட் செய்து,மீண்டும் மீண்டும் புதுமையாக உயிர்த்துவிட முடியாதா என்று நம் அனைவரையும் போல அவனும் ஏங்குகிறான்.மென்பொருள் பிழைப்பு என்பது நாய்ப்பட்ட பாடு என்று வெளியில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. இரா.முருகனின் நேர்த்தியான கதைசொல்லலில் நாமும் நிரந்தரமில்லாத மென்பொருள் உலகத்தில் குதிக்கிறோம். காசுக்காக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பறக்கிறோம். நேரம்,காலம்,சுற்றுப்புறம், கலாசாரம், சொந்த வாழ்க்கை என்று எதையும் சட்டை செய்யக்கூட நேரமில்லை. குறிப்பிட்ட டெட்லைனுக்குள் புராஜெக்ட் முடியவேண்டும்.மென்பொருள் சரியாக வேலை செய்ய வேண்டும்.கிளையண்ட் பணம் தர வேண்டும். அது ஒன்றுதான் முதலாளிக்குக் குறி. அவனது ஏவல் நாயான நமக்கும் அதுதான் குறியாகிறது.இதனால் வாழ்க்கயில் ஏற்படும் இழப்புகள் ஒன்றா இரண்டா? மென்பொருள் துறையை மையமாக வைத்துத் தமிழில் இதுவரை இப்படியொரு நாவல் வெளியானதில்லை.