Master Key To Homeopathic Materia Medica by Dr. K. C. Bhanja (Author), Dr.V.S. Subramaniyam (Translator) (Tamil Edition) book pdf free download
உலகில் சிறந்த வைத்திய முறைகளில் ஹோமியோபதியும் ஒன்றென்று தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அவசியம் இப்பொழுது இல்லை. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலம் படித்து அரசாங்கத்தில் உயர் பதவிகளிலிருந்த ஒரு சிலரால் பொழுது போக்காகக் கையாளப்பட்டு வந்த இவ்வைத்தியமுறை இன்று தமிழ் நாட்டில் ஆங்கிலம் அறியாத மக்களாலும் விரும்பிக் கற்கப்படுகிறது. ஹோமியோபதியைத் தமிழில் தபால் மூலமாகவும் நேர்முகமாகவும் போதிப்பதற்கென முன் வந்துள்ள ஹோமியோபதி ஹௌஸ் போன்ற ஸ்தாபனங்கள் இதற்கு முக்கிய காரணம்.
ஹோமியோபதி பற்றி அருமையான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருக்கின்றன. தமிழ் மட்டும் அறிந்தவர்களின் அறிவை வளர்க்க அம்மொழியில் பல நூல்கள் வெளிவர வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு எவ்விதமான நூலை வெளியிட்டால் ஹோமியோபதி ஒளஷதங்களைப் பற்றிய பூரணமான அறிவு ஏற்படும் என்று சிந்தனை கொண்டிருந்த சமயத்தில் டாக்டர் K.C.பஞ்சா.B.A., M.D. அவர்களால் எழுதப்பட்ட மாஸ்டர் கீ டு ஹோமியோபதிக் மெட்டீரியாமெடிகா என்னும் ஆங்கில நூல் என் பார்வைக்கு வந்தது. டாக்டர் பஞ்சா கல்கத்தா ஹானிமேனியன் மெமோரியல் காலேஜில் மெட்டீரியா மெடிகாப் பகுதிக்குப் பேராசிரியராய்ப் பதவி வகித்த மேல் நாட்டு ஹோமியோபதி அறிஞர்களாலும் பாராட்டப்பட்டவர். சிறந்த அறிவாளி. தத்துவஞானியுங்கூட.
அப்புத்தகத்தில் ஒவ்வொரு ஒளஷதத்தையும் ஆசிரியர் விவரித்துள்ள முறை முற்றிலும் புதுமையாகவும் கவர்ச்சிகரமாகவும் இருந்தது. ஒரு தடவை ஊன்றிப் படித்து விட்டால் நம் அறிவுக் கண்களை அகலத் திறந்து ஔஷதங்களின் சிறப்பியல்புகளைத் தெள்ளென மனதில் பதியவைக்கும் படியாகவும் இருந்தது.
இத்தகைய நூலைத் தமிழில் வெளியிட்டால் ஹோமியோபதிக்கும் தமிழ் நாட்டு ஹோமியோபதியர்களுக்கும் உண்மையான ஊழியம் செய்தது போலாகுமென்று முடிவு செய்து அவ்வாறு வெளியிட அதன் ஆசிரியர் டாக்டர் பஞ்சா அவர்களை அணுகினோம். சிறிதுகூடத் தயக்கமோ தாமதமோ செய்யாமல் அவர் அனுமதி அளித்தார். அவருக்கு எமது உள்ளம் நிறைந்த நன்றிகள் உரியதாகும். பிற மொழியிலுள்ள, அதுவும் வைத்தியக்கலைச் சொற்கள் மிகுந்த, ஒரு நூலைத் தமிழாக்கம் செய்வது மிகவும் சிரம சாத்தியமான காரியம் என்பது நம் அனுபவம். மற்றவர்களுக்கும் இவ்வனுபவம் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே என்னால் இயன்ற வரையில் பாடுபட்டு ஆங்கிலச் சொற்களுக்குப் பேச்சு வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களையே தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்திருக்கிறேன். என்னையும் மீறிக் குற்றங்கள் சேர்ந்திருக்கலாம். அறிஞர்கள் ஆராய்ந்து குற்றங்களை அறிவித்தால் அடுத்த பதிப்பிலாவது திருத்தம்செய்ய வசதியாகும். – ஆசிரியர்
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925