Maraikkappatta Pakkangal by Gopi Shankar book pdf free download (Tamil Edition)
பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு குறித்த புரிதல் இந்தியச் சமூகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பாலினச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சொல்லில் அடங்காதவை. இச்சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு உருவாவது மிகவும் தேவையான ஒன்று.
பாலினச் சிறுபான்மையினர் பற்றியும், உலகளாவிய வரலாறு மற்றும் தொன்மத்தில் அவர்களது இருப்பைக் குறித்தும், பங்களிப்பைப் பற்றியும் விரிவாக இப்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் கோபி ஷங்கர்.
இண்டர்செக்ஸ் நபரான (இடையிலிங்கத்தவர்) கோபி ஷங்கர் இந்நூல் மூலம் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான், ‘பாலினச் சிறுபான்மையினரும் எல்லோரையும் போன்ற மனிதர்களே.’ மிக எளிமையான இந்த உண்மையை இச்சமூகம் அவிழ்க்கவே முடியாத சிக்கலாக்கி வைத்திருக்கிறது. அச்சிக்கலுக்கான தீர்வின் முதல் படியே இந்தப் புத்தகம்.
இது சிலரை அதிர்ச்சியடைய வைக்கலாம். பலருக்குச் சங்கடத்தை அளிக்கலாம். பலரது மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் அடியோடு தகர்க்கவும் செய்யலாம். உண்மையில் இந்தப் புத்தகம் அவர்களுக்காகவும்தான். ஏனென்றால், இவர்களது உலகைப் புரிந்துகொள்ளாமல் உங்களுடைய எந்தப் புரிதலும் முழுமையடையப் போவதில்லை.
இதுவரை தமிழ் மொழியில் இல்லாத புத்தகம். பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு பற்றிய முக்கியமான புத்தகம். ஆங்கிலத்திலேயே எண்ணி விடும் அளவுகளில் தான் பாலினங்கள் பற்றி பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வடிவில் புத்தகங்கள் உள்ளன, அப்படி இருக்கும்போது இந்தியாவில் பாலினம் கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாத பட்சத்தில் இது ஒரு முக்கிய பொக்கிஷம் தான். முப்பதிற்கும் மேற்பட்ட பாலினம் இருப்பது இந்த புத்தகம் படிக்கும் வரை தெரியாது அதுபோல ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழில் தான் அந்த பாலினங்களுக்கு பெயர் இருப்பதும் தெரியாது. இந்த புத்தகம் எழுதிய கோபி ஷங்கர் மூன்றாம் பாலினம் பாதுகாப்பு சட்டம் 2016 வரையறுக்க முக்கியமான நபராக இருந்தவர் மற்றும் இவர் ஒரு இடையிலிங்கத்தவர் (intersex). பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு பற்றிய அறிவியல் மற்றும் அறிவு பூர்வமான விழிப்புணர்வுக்கு இந்தப் புத்தகம் முக்கியமான வழிகாட்டி.
பொதுவாக பாலினம் பற்றி நாம் ஒருவரிடம் கேட்டால் அவருக்கு தெரிந்த பாலினமாக மூன்று இருக்கும். ஆண், பெண், திருநங்கைகள். ஆனால் உண்மையில் பாலினங்கள் பல உள்ளன. ஒவ்வொன்றும் மற்ற பாலினத்தில் இருந்து வேறுப்பட்டது. ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினத்தின் வகைப்பாடுகள் என மற்ற பாலினம் அனைத்தையும் கூறலாம். ஆண் மற்றும் பெண் என்பதை 01 என்கிற எண்களாக எடுத்துக்கொண்டால் அதில் பல வகையான எண்களை உருவாக்க முடியும் இல்லையா…
01, 10, 110, 111, 011, 1110 1010,1101, 101 எண்களிலேயே இத்தனை உருவாகும்போது பாலினத்தில் உருவாகும் வகைகளில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் அந்த பாலின சமூகத்தை பற்றி நாம் அறிந்துக்கொள்ளாமலும் அதே சமயம் அவர்களை நிராகரித்தும் வருவது ஒரு கொடுமையான செயலாகும். இந்த பூமி அனைவருக்கும் சமமானதாக இருக்கிறது. ஆனால் ஆண், பெண் என்ற இரண்டு பாலினமும் அதிகமாக இருப்பதால் மனித வாழ்க்கைக்கான பாலியல் விதிமுறைகளை அவர்கள் நிர்ணயிக்கின்றனர்.
ஆனால் ஆண் பெண் தவிர்த்த மற்ற பாலினத்தை சேர்ந்தவர்கள் இந்த விதிமுறைக்குள் வர மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் பாலினம் சார்ந்து வேறு வகையான எண்ணங்களையும் தேடல்களையும் கொண்டிருப்பவர்கள். அது நமக்கு வித்தியாசமாக தெரியலாம். ஏனெனில் ஒரு ஆணால் எப்படி ஒரு பெண்ணின் மன நிலையை புரிந்துக்கொள்ள முடிவதில்லையோ அதே போல ஆண் பெண் இவர்கள் இருவராலும் இன்னொரு பாலினத்தை உணர்வு ரீதியாக புரிந்துக்கொள்வது கடினம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவத்தில் இருக்க வேண்டும்.
உதாரணமாக சுழியர்கள் என்கிற பாலியல் வகையை சேர்ந்தவர்கள் உடலுறவு மீது விருப்பம் இல்லாதவர்கள், ஆனால் அவர்கள் காதல் கொள்கின்றனர், சுய இன்பம் காண்கின்றனர், குழந்தைக்காக மட்டும் உடலுறவு கொள்கின்றனர். ஆனால் அவர்கள் உடலுறவு மேல் விருப்பமற்றவர்களாக இருக்கின்றனர்.
இதை சுழியர்களை தவிர்த்து மற்ற பாலினத்தவர்களால் எப்படி புரிந்துக்கொள்ள முடியும் என தெரியவில்லை. நமக்கு இது வியப்பானதாகவும் வித்தியாசமாகவும் இருக்கலாம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் இங்கே மற்ற பாலினத்தவர்கள் ஒடுக்கப்படுவது நிறுத்தப்படும்.
இந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் முழுக்க முழுக்க ஆண் பெண் அல்லாத மற்ற பாலினத்தவர்களை பற்றிய புத்தகம். இதன் ஆசிரியர் கோபி ஷங்கர் கூறும் விஷயங்கள் எல்லாம் மனிதர்கள் அனைவரும் ஒன்றே. அவர்கள் அனைவரும் ஒன்றே. பாலினம் சார்ந்து அவர்களை ஒடுக்காதீர்கள். முடிந்தால் அவர்களை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்கிறார்.
மேலும் வரலாறு நெடுகிலும் மற்ற பாலினங்கள் எந்த நாடுகளில் எல்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எந்த காலக்கட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை புத்தகம் கூறுகிறது. தமிழில் இந்த மாதிரியான புத்தகங்கள் வருவது மிக அரிய காரியமாக இருப்பதால் இது மிகவும் முக்கியமான புத்தகம்.
ஆசிரியர் வகைப்படுத்திய சில பாலின வகைகளை இப்போது வரிசைப்படுத்துகிறேன். இந்த பாலின வகைகளை படித்தபோது பல பாலினம் குறித்து அப்போதுதான் முதல் முறையாக அறிந்தேன்.
1. ஆண்
2. பெண்
3. திருநர்
4. திருநங்கை
5. திரு நம்பி
6. பால் புதுமையர்
7. பால் நடுவர்
8. முழுநர்
9. இருநர்
10. திரிநர் – Trigender
11. பாலிலி -Agender
12. திருநடுகர் – Neutrois
13. மறுமாறிகள் – Retransitioners
14. தோற்றப் பாலினத்தவர் – Appearance gendered
15. முரண் திருநர் – Transbinary
16. மாற்றுப்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers
17. இருமை நகர்வு – Binary’s butch
18. எதிர் பாலிலி Fancy
19. இருமைக்குரியோர் – Epicene
20. இடைபாலினம் – Intergender
21. மாறுபக்க ஆணியல் – Transmasculine
22. மாற்றுப்பக்க பெண்ணியல் – Transfeminine
23. அரைப்பெண்டிர் – Demi girl
24. அரையாடவர் – Demi guy நம்பி ஈர்ப்பனள் – Girl fags
25. நங்கை ஈர்ப்பனன் – Guy dykes
26. பால் நகர்வோர் Genderfluid
27. ஆணியல் பெண் – Tomboy பெண்ணன் – Sissy
28. இருமையின்மை ஆணியல் – Non binary butch
29. இருமையின்மை பெண்ணியல் – Non binary femme
30. மாற்றுப்பால் உடை அணிபவர் – Cross dresser
பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு இந்த மூன்றையும் மிக எளிமையான எழுத்துநடையில் அனைவரும் புரியும்படி தெளிவாக விளக்கும் புத்தகம் இது.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925