[PDF] குட்டி இளவரசன் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (ஆசிரியர்), வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி (தமிழில்) புத்தகம் pdf free download

Kutty Ilavarasan by Antoine de Saint-Exupery (Author), Yuma Vasuki (Translator) (Tamil) book pdf free download

The Little Prince (French: Le Petit Prince) by Antoine de Saint-Exupery (Author), Yuma Vasuki (Translator) (Tamil Edition) book pdf free download

இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம்.

குழந்தைகள் புத்தகம் என்று பொது அடையாளம் சூட்டப்பட்ட போதும் எக்சுபெரியின் நாவல் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை.

சுயசரிதை தன்மையுடன் துவங்குகிறது நாவல். எனக்கு ஆறு வயதான போது ஒரு அற்புதமான படத்தை கண்டேன். அது ஒரு காட்டுவிலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதை காட்டியது. அந்த படத்தை கண்டதும் அது போல ஒன்று வரையலாமே என்று நானும் ஒரு சித்திரம் தீட்டினேன். என்னுடைய படத்தை பெரியவர்களிடம் காட்டிய போது அவர்கள் ஒருவருக்கும் புரியவில்லை. அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது

பெரியவர்கள் ஒரு போதும் எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது.

என்று ஆரம்பிக்கிறது நாவல்.

96 பக்கங்களே உள்ள இந்த சிறிய நாவல் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்க கூடியது.

பெரியவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான். அவர்களுக்கே இது சமர்பணம் என்று நாவலின் முகப்புரை கூறுகிறது.

திரைப்படம், குழந்தைகள் திரைப்படம், நாடகம், இசைநாடகம், தொலைக்காட்சி தொடர், காமிக்ஸ், ரேடியோ நாடகம் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட வடிவங்களில் குட்டி இளவரசன் மாற்றம் கண்டுள்ளது.

நமக்குள் உள்ள சிறுவனை விழிப்படையச் செய்வதற்காக ஒரு முறை அவசியம் குட்டி இளவரசனை வாசியுங்கள். கவித்துமான அனுபவத்தை பெறுவீர்கள்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்