Koolamaathaari (Novel) Perumal Murugan book pdf free download (Tamil Edition)
என் நாவல்களில் ‘கூளமாதாரி’யைப் போல நான் லயித்து எழுதிய நாவல் பிறிதொன்றில்லை. காரணம் அதன் களம். என் பால்யம் இன்றைக்கும் வாழும் களம் அது. கூரைகளின் கீழ் வாழும் காலம் இது. ஆனால் எப்பேர்ப்பட்ட கூரையும் எனக்குச் சங்கடமே தரும். உடைத்து வெளியேறிவிடும் தவிப்பை அடைவதுண்டு. ஏதுமற்ற வெளியே என் ஆதர்சம். வெயில், மழை, குளிர், பனி, காற்று, பொழுது, நிலவு, மலை, புழுதி, பசுமை, வறள் எல்லாம் கூடிக் கலந்த என் மனவெளி அது. அதை உணரும் பேற்றை எனக்கு வழங்கியது இந்நாவலின் களமாகிய மேட்டுக்காட்டு மண். அங்கு உலவும் மனிதர்கள் உயிர் பெறுவதே அந்நிலத்தால்தான். ஆகவே அந்நிலத்தையும் பாத்திரமாக்கி உயிர் கொடுக்கும் சவாலை மேற்கொண்டேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்.
-பெருமாள் முருகன்