பார்ப்பனியம் (உள்ளுக்குள் பயந்து கொண்டேனும்) எகிறி அடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஐஐடி மாணவி தற்கொலைக்கு தூண்டப்பட்டது, சிதம்பரம் கோவில் பக்தை பூசாரி ஒருவனால் கன்னத்தில் அறையப்பட்டது என அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு எதிர்வினை என்ன? என்பது ஒரு புறம் இருந்தாலும், பார்ப்பனியம் குறித்து மக்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? எனும் கேள்வி இன்றியமையாதது. ஐயா தொ.பரமசிவன் அவர்களின் இந்த சிறு நூல் பார்ப்பனியம் குறித்த புரிதலை ஏற்படும் கையேடாக இருக்கும். படியுங்கள். பரப்புங்கள்.
உலகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும்.இதுவே உலக வரலாறு காட்டும் உண்மையாகும். அரசதிகாரம் மக்களை ஒடுக்கிய காலங்களில் அதனை நியாயப்படுத்தும் சாத்திரங்களும் எழுதப்படும். பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிஐப்படுத்தி தாங்கள் அடிமை என்று தங்காளையே ஏற்கச் செய்யும் இந்திய துணைக்கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கிறோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறை ஆகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திறள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம்.
ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும் பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும் சனநாயகத்துக்குமான தேடலாகும்.
பிறப்பு வழிப்பட்ட பார்ப்பனியத்தினை மட்டும் எதிர்ப்பதில்லை இந்த வெளியீட்டின் நோக்கம். பார்ப்பனக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களும் மறுப்புக்குறியவர்கள். ஆராட்சியாளர்கள் இவர்களைப் புதிய பார்ப்பனர்கள் (Neo-Brahmins) என அழைக்கின்றனர். நிகழ்காலத்தில் எல்லா வகையான ஊடகங்களையும் பார்ப்பனக் கருத்தியல் தனதாக்கிக் கொண்டது. பார்ப்பனியம் என்பது ஒரு பண்பாட்டு வல்லாண்மை என்ற கருத்தை முன்வைத்தே இந்த வெளியீடு உண்மையான சனநாயகத்துக்காகக் குரல் கொடுக்கிறது.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO BUY @ Amazon
Wait! Looking for Best Demat Account?
Start FREE Investing in Stocks & IPO with No 1 Stockbroker in India!!
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925