[PDF] இங்கே நிம்மதி என்.கணேசன் book pdf free download

Inge nimmathi N.Ganeshan book pdf free download (Tamil Edition)

”எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி?” என்று தேடி அலைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்காய் பெருகி வருகிறது. நிம்மதிக்காக மனிதர்கள் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். பெருமளவு பொருள்களையும், சொத்துக்களையும் சேர்த்துப் பார்க்கிறார்கள், புகழ் பின்னால் ஓடி அதை அடைந்து பார்க்கிறார்கள், குடி, போதை, செக்ஸ் ஆகியவற்றை பல விதங்களில் அனுபவித்துப் பார்க்கிறார்கள், ஆன்மீகம், சாமியார்கள் என்றெல்லாம் அடைக்கலம் புகுந்தும் பார்க்கிறார்கள். இத்தனை செய்தும் நிம்மதி அவர்களுக்கு தொடுவான தூரத்திலேயே நின்று விடுகிறதே ஒழிய சென்று அடைய முடிகிற இலக்காகத் தெரியவில்லை.

பார்க்கிற இடமெல்லாம் பிரச்னைகள், சண்டை, சச்சரவுகள் தெரிகின்றன. பெருகி வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிவது பெரும்பாடாக இருக்கிறது. அசுர வேக வாழ்க்கை ஓட்டத்தில் அன்பும், அமைதியும் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றன. வீட்டில் துவங்கி நாடு, உலகம் எங்கும் சுயநலம், அலட்சியம், அநீதி, பொறுப்பின்மை, போலித்தனம் தான் பிரதானமாகத் தெரிகின்றன. இப்படி நிம்மதிக்கு எதிர்மறையான சூழ்நிலைகளே தெரிகையில் தனிமனிதன் நிம்மதியை எப்படிக் காண முடியும் என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.

ஆனால் தனிமனிதன் தன் வாழ்க்கையிலும், உலக நடப்பிலும் எல்லாமே சரியாக மாறினால் தான் நிம்மதியாக இருப்பேன் என்று அடம் பிடித்தால் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எந்தப் பிறவியிலும் நிம்மதி காண முடியாது. அலை ஓய்ந்தால் தான் தலை முழுகுவேன் என்று காத்திருப்பவனுக்கு சமுத்திரக் குளியல் என்றுமே சாத்தியம் இல்லாதது போல எல்லா பிரச்னைகளும் தீர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து மனிதர்களும் திருந்தி, எல்லாம் ஒழுங்காகப் போகும் வாழ்க்கை தனிமனிதனுக்கு சாத்தியம் இல்லை. எங்கும், எப்போதும் ஏதோ குறைகள் இருக்கத்தான் செய்யும் என்பது தான் எவனுக்கும் இன்றைய யதார்த்தம்.

இந்த யதார்த்த வாழ்க்கைக்குத் தயாராகி, தன்னால் முடிந்த வரையில் தன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, தன் சக்திக்கு மீறிய சூழ்நிலைகளால் அதிக அளவில் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டு இந்தக் குறைகள் நிரம்பிய வாழ்விலும் நிம்மதியை அடைய முடிவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அது முடியாத விஷயமும் அல்ல. சிந்தனையில் தெளிவிருந்தால், செயல்களில் உறுதியிருந்தால், புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தால் நிம்மதியும், நிறைவும் நமக்கு அன்னியமாகி விட முடியாது.

குட்டிக் கதைகள் மூலமாகவும், உதாரணங்கள் மூலமாகவும் பல கோணங்களில் வாழ்க்கையையும், சூழ்நிலைகளையும், பிரச்னைகளையும் அலசி, யதார்த்த உண்மைகளை உணர்த்தி, பக்குவப்படுத்தி, ’இங்கே இருக்கிறது நிம்மதி’ என்று நிம்மதிக்கான வழிகளில் உங்கள் கையைப் பிடித்து இந்த நூலின் கட்டுரைகள் உங்களை அழைத்துச் செல்லும்.

இக்கட்டுரைகள் வெவ்வேறு காலத்தில் என்னால் எழுதப்பட்டவை. அதனால் இத்தொகுப்பில் ஒரு கட்டுரையில் உள்ள கருத்துகளில் சில இன்னொரு கட்டுரையிலும் அந்தக் கட்டுரையின் தேவைக்கேற்ப திரும்பவும் என்னால் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியும். ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படும் தகுதி படைத்த அது போன்ற கருத்துக்களை நான் நீக்காமலிருக்கக் காரணம் அவை திரும்பத் திரும்ப நம் மனதில் உறுதியாக ஆழமாய் பதிய வேண்டியவை என்பது தான்.

இந்த நூலைக் கதை போல படித்து மூடி வைத்து மறந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்றது போலத் தோன்றும் இடங்களை கோடிட்டுக் கொண்டோ, வேறு விதமாக குறியிட்டோ வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் படிக்கையில் ”ஆமாயில்ல!” என்று ஆச்சரியப்படுத்தும் உண்மைகள் காலப்போக்கில் நம் நினைவில் இருந்து நீங்கி விடக் கூடும். நீங்கள் குறித்துக் கொண்ட இடங்களை நிம்மதி இல்லாமல் தவிக்கும் காலங்களிலும், மனோதைரியம் குறையும் காலங்களிலும் ஒருமுறை எடுத்துப் படித்துப் பாருங்கள். உங்கள் மனதிற்கு அந்த நேரங்களில் இந்த நூல் டானிக் போல் புத்துணர்ச்சி பெற உதவும்.

வாருங்கள் நிம்மதியைக் காணலாம்…..

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

இங்கே நிம்மதி! (Tamil Edition) by [என். கணேசன்]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்