[PDF] இது ராஜபாட்டை அல்ல சிவக்குமார் புத்தகம் pdf free download

Idhu Rajapattai Alla by Sivakumar book pdf free download (Tamil Edition)

சிவகுமார் திரையுலகம் வராமல் இருந்திருந்தால், நிச்சயம் எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்திருப்பார் என்பது இந்த நூலின் மூலம் புரிகிறது. ஒரு வேளை இன்னொரு ஜெயகாந்தனாக ஆகியிருக்கலாம். டைரக்டர் கே. பாலச்சந்தர் கர்நாடக சங்கீத மேதைகள் ஆலத்தூர் சகோதரர்கள் கச்சேரியைக் கேட்கையில் எனக்கு உண்மையாகவே வியர்த்து விறுவிறுத்துவிடும். அந்த மாதிரி ஆயாசம் உங்களது தொகுதியைப் படிக்கையில் எனக்கு ஏற்பட்டது. நடிப்பிலும் ஓவி பதிலும் மட்டுமின்றி எழுத்திலும் உங்களுக்குத் திறமை இருப்பதை நிருபித்து விட்டீர்கள். மனது ஆடம்பரமிழந்து எளிமை எய்தும் பொழுது வார்த்தைகளும் எளிமைப்பட்டு ஆழமான அர்த்தம் பெறும் அழகை உங்கள் பாட்டையில் கண்டேன். – லா.ச.ராமாமிருதம்

திரையுலகில் 40 ஆண்டுகள் வெற்றிகரமான நடிகராக முத்திரை பதித்தவர் சிவகுமார். திரைக்கு வெளியே ஓவியத் துறை, மேடைத் தமிழ் எனத் தன்னுடைய பன்முகத் திறன்களை வெளிப்படுத்தியவர், எழுத்துத் துறையையும் விட்டுவைக்கவில்லை. அவரது நூல்களில் முதன்மையானது ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற தன்னடக்கத்துடன் வெளியான அவருடைய சுயசரிதை. ‘‘ஒரு சங்கீத வித்துவான், இன்னொரு வித்துவானைப் பாராட்ட மாட்டார். ஒரு எழுத்தாளர், இன்னொரு எழுத்தாளரைப் பாராட்ட மாட்டார். ஆனால், சிவகுமார் தன்னுடன் பயணித்த, தனக்கு நிகரான வெற்றிகளைப் பெற்ற பலரைக் குறித்து, மிகப் பெரிய கௌரவத்தையும் பாராட்டையும் கொடுத்து எழுதியிருக்கிறார்” – நடிகரும் பத்திரிகையாளருமான .சோ

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த சிவகுமார், பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு எப்படி ஒரு நல்ல நடிகனாய், கதாநாயகனாய் உயர்ந்தார் என்பதைக் கூறுவதே இந்நூல். அவர் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்த பலரைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். நடிகர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கனேசன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ், முத்துராமன், வீரய்யா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், நடிகைகள் லட்சுமி, ராதா, ராதிகா, ஆச்சி மனோரமா, ஜெயலலிதா, பாடலாசிரியர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, இயக்குநர்கள் ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர், பாரதிராஜா, மனிரத்தினம், மணிவண்ணன், ஆர். சுந்தரராஜன், பாலா, தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம், முக்தா சீனிவாசன், சான்டோ சின்னப்ப தேவர், வசனகர்த்தாக்கக்ள் ஆரூர் தாஸ், கலைஞர் மற்றும் நாடக நடிகர்கள் எனப் பலரைப் பற்றிய நல்ல நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய நூல்.

எழுத்தாளர் பற்றி :

தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற ஓவியக் கலைஞர்; எழுத்தாளர், பேச்சாளர். தனது அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறவர். சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார். கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்