எல்லோருக்கும் தெரிந்த பழமொழி தான், ‘ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘. ஆனால், அடிப்படை கல்வி இல்லையென்றால், சுரைக்காய் என்பது என்னவென்றே தெரியாது. அது போல தான் பங்குச்சந்தையின் அடிப்படை பகுப்பாய்வு. பங்குச்சந்தையில் அடிப்படை கல்வி இல்லையென்றால், முதலீடு என்பது தண்ணீரில் போட்ட உப்புக்கு சமமாகும். உதாரணமாக, மற்ற மொழிகளை நாம் கற்க வேண்டுமென்றால், அந்த மொழியின் உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகியவற்றிலிருந்து தான் தொடங்க வேண்டும். இது தான் பங்குச்சந்தையிலும் செய்யக்கூடிய சரியான அணுகுமுறை. நான் ஏன் பங்குச்சந்தையின் அடிப்படையை பற்றி ஆணித்தரமாக கூறுகிறேன் என்றால், இவ்வுலகில் பங்குச்சந்தை மூலம் மிகப்பெரிய செல்வந்தர்களான அனைவரும் பொதுவாக அடிப்படைவாதிகளே. மற்ற முறைகளில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. முதலீடு மற்றும் அதன் மூலம் பணத்தை பெருக்குவதற்கான அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றியவர்களில் மாபெரும் செல்வந்தரான திரு. வாரன் பப்பெட்டும்(Warren Buffet) ஒருவராவார்.
இந்த புத்தகத்தை எழுதியவரும் பங்குச்சந்தை அடிப்படைவாதியாக தான் இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் செய்யக்கூடிய முதலீடு எக்காரணம் கொண்டும் நஷ்டமடைய கூடாது என்பதனை இவர் விவரிக்கும் சந்தை மொழியே கூறும். நடுத்தர மக்களுக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் இது ஒரு சிறந்த புத்தகமாக அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஏற்கனவே வெற்றிகண்ட குதிரையின் மீது பந்தயம் கட்டுவதை விட, வெற்றி பெறப்போகும் குதிரையின் மீது பந்தயம் கட்டுவது தான் புத்திசாலித்தனம். அதனை போலத்தான், பங்குச்சந்தையில் ஏற்கனவே வெற்றி பெற்ற முதலீட்டாளர்களை பின்பற்றுவதை விட, நம்மை வெற்றி பெற அழைத்து செல்லும் நமது எழுத்தாளரின் அறிவை பயன்படுத்துவதன் தான் சிறந்தது.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO BUY @ Amazon
Wait! Looking for Best Demat Account?
Start FREE Investing in Stocks & IPO with No 1 Stockbroker in India!!
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925