Enathu India S. Ramakrishnan book pdf free download (Tamil Edition)
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பதிவு செய்யப்படுகிற ஒன்றாகிவிட்டது. சுவாரஸ்யம் மிக்க வரலாறே உண்மை என்கிற கசப்பான காலகட்டத்தில்,சாலச் சிறந்த பார்வையோடு, உண்மையை மட்டுமே பதிவு செய்யும் சிரமமிகு தேடுதலோடு இந்திய வரலாற்றைக் காலக் கல்வெட்டாகப் படைத்திருக்கிறார்.
எஸ்.ராமகிருஷ்ணன்.இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்தவராக,படித்தவராக,ஆவணங்கள் தொடங்கி ஆராய்ச்சிகள் வரை பகுத்துப் பார்த்தவராக ‘எனது இந்தியா’ தொடரை எஸ்.ராமகிருஷ்ணன் ஜூனியர் விகடனில் எழுதத் தொடங்கியபோது, அதன் உண்மையான சுவாரஸ்யத்திலும் வரலாற்று நிகழ்வறியும் பேராவலிலும் சொக்கிக் கிடந்தது வாசக வட்டம். ‘நீதி தேவதை’யை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் காரணமான மகாத்மாவின் கொலை வழக்கில் இருந்து தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணன், நீதிக்கும் இந்திய வரலாற்றுக்கும் உள்ள தொடர்பை மொகலாயர் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.
மொகலாயர்களின் படையெடுப்பு, கஜினி முகமது 17 முறை படையெடுத்து இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்த அவலம்,மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அரியணையைப் பிடிப்பதற்காக நடந்த சதிகள், நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த போர்கள், வளம் கொழித்து செல்வச் செழிப்போடு விளங்கிய இந்தியாவின் நிலை, வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பின்னால் வணிகம் என்ற போர்வையில் இந்தியா சுரண்டப்பட்ட கோலம் என இந்திய வரலாற்றுச் சம்பவங்களை தெளிந்த நீரோடையின் ஓட்டமாகச் சொல்லி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக ‘எனது இந்தியா’ அறியப்படாத தகவல்கள். உண்மைகள், நிகழ்வுகளுடன் புதிய வெளிச்சத்தை தருகிறது. தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் பயிற்சிப் பள்ளிகளில் இந்நூல் பாடமாகப் போதிக்கபடுகிறது.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
CLICK HERE TO DOWNLOAD [mediafire]
CLICK HERE TO DOWNLOAD