[PDF] ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ம. வெங்கடேசன் புத்தகம் pdf free download

பெரியாரின் மறுபக்கம் ம. வெங்கடேசன் (Tamil) book pdf free download

E.Ve.Ramasamy nayakkarin marupakkam by M. Venkatesan book pdf free download (Tamil Edition)

Periyarin marupakkam by M. Venkatesan (Tamil) book pdf free download

அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர். ‘இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

‘நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்

3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன். அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம், ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர், கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக் காட்டியிருப்பதையும் படித்தேன். அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ – அந்தக் கருத்துக்கு – அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடி மறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும். ‘மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் –

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு,

இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள்,

ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை,

சொல்லும் செயலும் முரணானவையே,

வரலாற்றுத் திரிபுகள்,

தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா ?,

வைக்கம் போராட்டம் – ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும்,

ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம்,

தேசப்பற்றி இல்லாத ஈவேரா,

பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும்,

சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும்

என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார் ஆசிரியர் வெங்கடேசன்.

பிற்சேர்க்கையாய் ‘ஈவேராவைப் பற்றி இவர்கள் ‘ என்று முத்துராமலிங்கத்தேவர், பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம் ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்