Ayeesha by Era. Natarasan (Tamil) book pdf free download
கல்வி – வாழ்க்கை – அறிவியல் புனைக்கதை
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா… இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.
இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, ‘ஆயிஷா நடராசன்’ என்றே அறிய வைத்த கதை.
– கணையாழி வழி – ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.
– ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.
– நிகர் முதல் வாசல் வரை – 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.
– அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.
– அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.
– ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயிஷா. ரெம்ப சின்ன நூல். ஆனால் ஒரு சிறு மிளகின் உரைப்பைபோல கண்கலங்க வாய்த்த நூல். கேள்வி கேட்பவரை மிதித்து நசுக்கி நெருப்பிலிட்டு கருக்கும் ஒரு நிறுவனமாகவே நம் கல்வி கூடங்கள் செயல்படுகிறது இன்றும். எதுவும் பெரிதாக மாறவில்லை என்று நினைக்கும் போது மனம் வெம்புகிறது. நானும் கேள்விகேட்டபோது எல்லாம் “அதிகபிரசிங்கி, மொதல்ல மார்க் வாங்கு அப்புறம் கேள்வி எல்லாம் கேக்கலாம்” என்று மட்டம்தட்டப்பட்டு பலமுறை உக்கார வைக்கப்பட்டேன். ஆயிஷாவின் மூலம் அந்த வலியை திரும்ப உணர்ந்தேன். சமீப காலத்தில் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு.
நமது பள்ளிகளின் கல்விமுறையை சீரமைக்க வேண்டிய தேவையை உணர்த்தும் நூல்.
ஆயிஷா எனும் சிறுமியின் கேள்விகள் நிறைந்த உலகிற்கு நம்மை இழுத்துச் சென்று, முடிவில் கண்ணீரால் நிரப்புகிறார் நூல் ஆசிரியர்.
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
மிகவும் சிறிய, மிகவும் சிறந்த நூல்.
ஒவ்வொரு ஆசிரியரும் நிச்சயமாக படிக்க வேண்டும். முடிந்தால் இந்த புத்தகத்தை B.Ed பட்டபடிப்பில் சேர்க்கலாம். சிறிய புத்தகம் எனினும், ஏற்படுத்துவதோ மிகப்பெரிய தாக்கம்.
நம் அனைவருக்குள்ளும் ஆயிஷா இருக்கிறாள்! அவளை வளரவிடுவது பெற்றோர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் தான் உள்ளது.
அனைவர்க்கும் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது!.
இன்றைய கல்வி முறை, பள்ளிச்சூழல் மற்றும் ஆசிரியர்களின் தரம் ஆகியனவற்றை விவரிக்கும் ஒரு குறுநூல். கற்றுக்கொள்ள தனியாத ஆர்வம் உள்ள ஒரு பள்ளி மாணவி பள்ளி ஆசிரியர்களால் எவ்வாறு மாற்றப்படுகிறார் என்பதை விவரிக்கிறது.
அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் படிக்கவேண்டிய கட்டுரை.
‘முள்ளை முளையிலேயே கிள்ளு’ என்ற பழமொழியைத் தவறாய், ‘முல்லையை முளையிலேயே கிள்ளு’ என்று கொண்டு, இன்றைய கல்விச்சமூகம் நடை போட்டு வருகிறது.
அதை எளிமையாய் வெளிச்சத்துக்குக் காட்டும் ஒரு குறுநாவல்.
ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையான புத்தகம் என்ற விளம்பரத்துடன் வெளியாகியுள்ள பல்வேறு புத்தகங்களை நாம் பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம். ஆனால் கண்டிப்பாக ‘ஆயிஷா’ ஒரு லட்சம் அல்ல பல கோடி பேர் அறிந்திருக்க வேண்டிய புத்தகமாக அமைந்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டியது இந்நூல். ஆயிஷா என்ற சிறுமியைப் பற்றிய இந்நூலினைப் படித்தவுடன் கண்டிப்பாக இதனை மற்றவர்கள் படிக்க அறிவுத்த வேண்டும் என்று எண்ணியதுண்டு. ஏன் இந்த எண்ணம் மனதில் ஏற்பட்டது என்பதை நீங்கள் படித்தபின் அறிந்துகொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். அதனாலேயே பலரும் படிப்பதற்காகவும் பகிர்வதற்காகவும் புத்தகங்களின் பக்கங்களைப் பரிமாற்றம் செய்துள்ளேன் (புத்தகம் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ளவும்). படித்த பின்… தாள்களையும் தங்களின் எண்ணங்களையும் மற்றவருடன் பகிருங்கள்…
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு என்று புரிந்துக் கொள்ளாதவரை ஆங்காங்கே வன்முறைகள் நடந்துக் கொண்டே தான் உள்ளது. வன்முறை என்பது ஆயுதத்தால் மட்டுமல்ல, அடுத்தவரை பார்க்கும் பார்வையிலே, நம் சொல்லாலே, செயலாலே நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படியே ஆயிஷாவுக்கும் நடந்து உள்ளது.
தொடர் கேள்விகள் ஆசிரியர்களை கொல்லவே செய்கின்றன. ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும் மனிதரும் படிக்க வேண்டிய புத்தகம்.
ஒரு 24 பக்க புத்தகம் ஒருவரின் அடையாளத்தை (நடராசன் to ஆயிஷா நடராசன்) மாற்றும் என்றால் அந்த புத்தகத்தின் வலிமை எவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…
இன்றைய கல்விமுறையின் தவறாலும் அசிரத்தையும் அடக்குமுறை மனப்பான்மையும் உடைய ஆசிரியர்களாலும் அநியாயமாக பலிவாங்கப்படும் ஒரு சிறுமியின் கதை. ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய சிறுநூல்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925