3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா தமிழாக்கம்: டாக்டர் ப. காளிமுத்து pdf download
3000 Aandugalukku Murpatta India John Wilson Book pdf free download (Tamil Edition)
India 3000 years ago by John Wilson (Author), Dr. Kalimuthu (Translator) Book pdf free download (Tamil Edition)
3000 ஆண்டுகளுக்கு முன் ஆரியம் எப்படி அடிமேல் அடியெடுத்து வைத்து இந்தியாவுக்குள் நுழைந்து கலாச்சார ரீதியில் ஆக்கிரமித்துள்ளது என்று விவரிக்கும் நூல்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவின் அசல் சமூக வரலாற்றை 78 பக்கங்களில் அடக்கி நம்மை விறுவிறுப்பாக வாசிக்கவும் செய்து விடுகிறார் ஜான் வில்சன். டாக்டர் ப. காளிமுத்து அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். ஸ்காட்லாந்தை தாயகமாகக் கொண்ட வில்சன் ஒரு மதப் பரப்புரையாளர். தொன்மைக்கால வரலாறு, வேதங்கள், இதிகாசங்கள், ஆரியர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1850 களில் பம்பாயில் புகழ்பெற்று விளங்கிய ராயல் ஏசியாடிக் சொசைட்டி என்னும் அமைப்பின் மதிப்புறு தலைவராக இருந்து பணியாற்றியவர்.
1858 ஆம் ஆண்டு பம்பாய் நகர் மன்ற அரங்கில் வில்சன் நிகழ்த்திய சொற்பொழிவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா அல்லது சிந்து நதிக்கரையில் இருந்த வேதகாலத்து ஆரியர்களின் சமூக நிலை (India Three thousand years ago or The social state of the Aryans on the Banks of the Indus in the times of the Vedas) என்னும் இந்த நூல். ஒரு ஆய்வு நூல் என்றும் கூட இதைச் சொல்லலாம். 1858 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த இந்நூல், 127 ஆண்டுகளுக்குப் பிறகு 1985 இல், பயனீர் புத்தக மையத்தின் சார்பில் என். குமாரசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. இப்போது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவில் குடியேறிய ஆரியர்களின் வரலாறாக இந்நூல் விரிகிறது. அதோடு ஆரியர்கள் வெற்றி கொண்ட, அடக்கியாண்ட இம்மண்ணின் தொல் பழங்குடிகளின் சமூக, அரசியல், பொருளாதார, சமய நிலையையும் இது தெரிவிக்கிறது. ஆரியர்களின் சமயக் கவிதைகளான வேதங்களில் இப்போதைய இந்து சமயத்தின் எந்தவொரு கேடான அம்சங்களும் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக நிறுவுகிறார் ஜான் வில்சன். வேதங்களின் மூலப்பிரதி ஒன்றைத் தாம் பெற்றிருந்ததாகவும், அதையே தாம் கற்றதாகவும் வில்சன் தெரிவிக்கிறார்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
CLICK HERE TO DOWNLOAD [mediafire]
CLICK HERE TO DOWNLOAD